என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூரில் கத்தியை காட்டி வழிப்பறி செய்த கொள்ளையர்கள் 8 பேர் கைது
    X

    பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள், இருசக்கர வாகனங்களை படத்தில் காணலாம்.

    ஓசூரில் கத்தியை காட்டி வழிப்பறி செய்த கொள்ளையர்கள் 8 பேர் கைது

    • இருசக்கர வாகனங்களை வழிப்பறி செய்த கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர்.
    • அவர்களிட மிருந்து சுமார் 32 செல்போன்கள் மற்றும் 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.

    ஓசூர்,

    கடந்த 3 மாதங்களாக ஓசூர் சிப்காட் மற்றும் கர்நாடக மாநில பகுதிகளில் கம்பெனிக்கு வேலைக்கு செல்பவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் இருசக்கர வாகனங்களை வழிப்பறி செய்த கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. சரோஜ்குமார் தாகூர் உத்தரவுப்படி ஓசூர் டி.எஸ்.பி. பாபுபிரசாந்த் மேற்பார்வையில் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்ரி, தலைமையில் சிப்காட் சப்-இன்ஸ்பெக்டர்கள் மஞ்சுநாதன், பட்டு அன்புக்கரசன் மற்றும் போலீசார் சகிதம் தனிப்படை அமைக்கப்பட்டு வாகன தணிக்கை செய்தனர்.

    அப்போது வழிப்பறி செய்த கொள்ளையர்கள் ஓசூர் அருகே பேட்ரப்பள்ளியை சேர்ந்த ஈஸ்வரன், அபு, பரத் தனுஷ், கிரன்குமார், தினேஷ், ஆகாஷ்ராஜு, கணேஷ் மற்றும் சக்திகுமார் ஆகிய 8 பேரை கைது செய்தனர்.

    பின்னர் அவர்களிட மிருந்து சுமார் 32 செல்போன்கள் மற்றும் 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×