என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி மாவட்டத்தில் பள்ளி மாணவன் உள்பட 2 பேர் மாயம்
    X

    தருமபுரி மாவட்டத்தில் பள்ளி மாணவன் உள்பட 2 பேர் மாயம்

    • கடைக்கு செல்வதாக கூறி சென்ற தமிழ்மணி வீடு திரும்பவில்லை
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான முனியப்பனை தேடிவருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் திப்பிரெட்டி அள்ளி அருகே கொண்டகரஅள்ளி காட்டுவளவு கிராமத்தைச் சேர்ந்தவர் மகாராஜன். இவரது மகன் தமிழ்மணி (வயது15). இவர் திப்பிரெட்டிஅள்ளியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 14-ந் தேதி கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டைவிட்டு வெளியே சென்ற தமிழ்மணி, மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை மகாராஜன் பொம்மிடி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுவனை தேடிவருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அஞ்சே அள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். இவருக்கு வீராசாமி (32) என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் முனியப்பன் கடந்த 15-ந் தேதி ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறி வீட்டைவிட்டு வெளியே சென்றார். ஆனால், மீண்டும் அவர் வீடு திரும்பிவரவில்லை. இதுகுறித்து அவரது மகன் வீராசாமி பென்னாகரம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான முனியப்பனை தேடிவருகின்றனர்.

    Next Story
    ×