என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவிழாவை ஒட்டி அனைவருக்கும் வழங்க தயாராகும் ஆட்டு இறைச்சியை படத்தில் காணலாம்.
அரூரில் தேவாதியம்மன் கோவில் திருவிழா
- மறுநாள் காலை 221 ஆடுகள் வெட்டப்பட்டு 2,275 குடும்பங்களுக்கும் கறி பங்கிட்டு வழங்கப்பட்டது.
- இந்த கறியை பெண்கள் உட்பட குடும்பத்தில் இருப்போர் அனைவரும் சாப்பிடுவார்கள்.
அரூர்,
தருமபுரி மாவட்டம்,அரூரில் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமூகத்தின் சார்பாக ஆண்டு தோறும் தேவாதியம்மன் திருவிழா கொண்டாடப்படும். இந்த விழாவனது ஆண்டுதோறும் தை மாதத்தில் நடத்தப்படும்.
வியாபார மேம்பாடு, குடும்ப நலம், ஊர் நலம், அமைதி, மழை வளம் ஆகியவற்றை வேண்டி நடத்தப்படும் தேவாதியம்மன் விழாவில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள்.
பெரும்பாலோனோர் ஜவுளி சார்ந்த தொழிலை செய்த வருகின்றனர்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இவர்கள் தொழில் செய்து வருகின்றனர்.
எங்கிருந்தாலும் இந்த தேவாதியம்மன் திருவிழாவில் தவறாமல் கலந்து கொள்வார்கள்.
அரூரில் காமாட்சியம்மன் ஆலயத்தின் பின்புறம் உள்ள தேவாதியம்மன் தோட்டத்தில் ஆவாரம் செடியின் அடியில் நடத்தப்பட்ட விழாவில் காலை முதல் நாள் 22 அம்மன் குட்டிகள் வெட்டப்பட்டது.அதன் ரத்தத்தை பிரசாதமாக ஆண்கள் அனைவரும் நெற்றியில் வைத்து கொண்டனர். பின்னர் பொங்கல், பொறி கடலை அனைவ ருக்கும் கொடுக்கப்பட்டது. மாலை 750 ஆண்களுக்கு கறி சாப்பாடு போடப்பட்டது.
மறுநாள் காலை 221 ஆடுகள் வெட்டப்பட்டு 2,275 குடும்பங்களுக்கும் கறி பங்கிட்டு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சங்க பொறுப்பாளர்கள் வெங்கடேசன், எச்சி வெங்கடேசன், சேட்டு, மதன், செந்தில்குமார் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். இந்த கறியை பெண்கள் உட்பட குடும்பத்தில் இருப்போர் அனைவரும் சாப்பிடுவார்கள்.
தெலுங்கு செட்டியார்கள் வசிக்கும் படப்பள்ளி, வெங்கட்டம்பட்டி, பருகூர், கப்பல்வாடி, பறையப்பட்டி புதூர் பெருகோபனஅள்ளி, தாச ரஅள்ளி, பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி ஆகிய பகுதிகளில் தேவாதியம்மன் விழா ஒவ்வொரு ஆண்டும் விமர்சையாக தை மாதத்தில் நடைபெற்று வருகிறது.