என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு நீரேற்றும் திட்டத்தை செயல்படுத்தி   கம்பைநல்லூர் பகுதி நீர் நிலைகளை நிரப்ப வேண்டும்   -விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை
    X

    கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு நீரேற்றும் திட்டத்தை செயல்படுத்தி கம்பைநல்லூர் பகுதி நீர் நிலைகளை நிரப்ப வேண்டும் -விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை

    • 3-வது வட்ட மாநாடு ஒன்றிய செயலர் முருகன் தலைமையில் நடைபெற்றது.
    • ஏரிகள் மற்றும் நீர்நிலைகளில் தண்ணீரை நிரப்ப வேண்டும்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூரில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க காரிமங்கலம் வட்டத்தின் 3-வது வட்ட மாநாடு ஒன்றிய செயலர் முருகன் தலைமையில் நடைபெற்றது. சங்க மூத்த நிர்வாகி அழகுதுரை சங்க கொடியேற்றி வைத்தார். ஒன்றியக்குழு உறுப்பினர் மனோகரன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். ஒன்றிய துணைச் செயலர் மாதேஸ்வரன் வரவேற்றார்.

    இந்த மாநாட்டில் கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு நீரேற்றும் திட்டத்தை செயல்படுத்தி கம்பைநல்லூர் வட்டாரப் பகுதியில் வறண்டுகிடக்கும் ஏரிகள் மற்றும் நீர்நிலைகளில் தண்ணீரை நிரப்ப வேண்டும்.

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகளிலும் வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் நிலம் வழங்க வேண்டும். 60 வயது நிறைவு செய்த தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ. 3 ஆயிரம் உதவித் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    சங்கத்தின் புதிய வட்டத் தலைவராக மாதுமணி, வட்ட செயலராக மனோகரன் உள்ளிட்ட 15 பேர் கொண்ட ஒன்றியக்குழு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.இதில் சங்க மாவட்ட செயலர் முத்து, மாவட்ட துணைத் தலைவர் கோவிந்தசாமி, மாவட்ட பொருளர் முருகன், சி.ஐ.டி.யு. மாவட்ட இணைச் செயலர் ஆனஸ்ட்ராஜ், விவசாயிகள் சங்க ஒன்றிய செயலர் மாது, ஒன்றிய செயலர் ஜெயராமன், மாவட்டக்குழு உறுப்பினர் பெருமாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×