search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முறைகேடாக ரியல் எஸ்டேட் உரிமம்:  தாசில்தார் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை
    X

    பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டவர்கள்.

    முறைகேடாக ரியல் எஸ்டேட் உரிமம்: தாசில்தார் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை

    • நல்லாம்பாளையம் பகுதியில் தனியார் பெயரில் ரியல் எஸ்டேட் அமைக்கப்பட்டு இருந்தது.
    • மேலும் ரியல் எஸ்டேட் அனுமதி ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்ற சொன்னார்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, நல்லாம்பாளையம் பகுதியில் தனியார் பெயரில் ரியல் எஸ்டேட் அமைக்கப்பட்டு இருந்தது. இதற்கு முறைகேடாக அனுமதி கொடுக்கப்பட்டதாக ஊராட்சி மன்ற உறுப்பினர் கதிரேசன் தரப்பினர் கிராம சபா கூட்டத்தில் புகார் கூறினார். மேலும் ரியல் எஸ்டேட் அனுமதி ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்ற சொன்னார்.

    அதை ஊராட்சி தலைவி மறுக்கவே ஊராட்சி அலுவ லகம் முன்பு 2 நாட்களாக பகல், இரவாக காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் அதே ரியல் எஸ்டேட் பகுதியில் சாலை அமைக்க வந்தவர்களிடம், எதிர் தரப்பினர் சாலை அமைக்க எதிர்ப்பு தெரி வித்து போராட்டம் நடத்தினர். இது குறித்து ஊராட்சி மன்ற உறுப்பினர் உள்ளிட்ட 7 பேர்கள் மீது ஊராட்சி தலைவி புஷ்பா குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். இது குறித்து வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க, இது சம்பந்தமாக முத்தரப்பு அமைதி பேச்சுவார்த்தை குமாரபாளையம் தாசில்தார் கதிர்வேல் தலைமையில் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் இரு தரப்பினர், இன்ஸ்பெக்டர் ரவி, உள்ளிட்டோர் பங்கேற்ற னர். இரு தரப்பினரின் கருத்துக்களை கேட்ட தாசில்தார், இது குறித்து சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்வதாகவும், அதுவரை யாரும் எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்க கூடாது எனவும் கூறினார். இதனை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

    Next Story
    ×