search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காய்கறிகளை பதுக்கினால் நடவடிக்கை: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் எச்சரிக்கை
    X

    கடலூரில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார். 

    காய்கறிகளை பதுக்கினால் நடவடிக்கை: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் எச்சரிக்கை

    • மேட்டூரில் தண்ணீர் திறப்புக்கு முன்பாகவே தூர்வாரும் பணி அதிரடியாக திட்டமிட்டு 100 சதவீதம் கடைமடை வரை முடிக்கப்பட்டுள்ளது.
    • சென்னையில் கூட்டுறவுத்துறை மூலம் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.

    கடலூர்:

    டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாசனத்திற்காக மேட்டூரில் கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு முதல் - அமைச்சர் மு.க.ஸ்டா லின் தண்ணீரை திறந்து விட்டார் .இதனைத்தொடர்ந்து அனைத்து டெல்டா மாவட்ட பகுதிகளிலும் குறுவை தொகுப்பு திட்டம் அறிவிக்க ப்பட்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வழி காணப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடலூர் டெல்டா பகுதிகளில் பாசனம் பெறும் காட்டுமன்னா ர்கோயில், பரங்கிப்பேட்டை, மேல் புவனகிரி, குமராட்சி, கீரப்பாளையம் ஆகிய வட்டாரங்களில் இத்தொகுப்பு திட்டம் ரூ. 8.41 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்த ப்படுகிறது. முன்னதாக கடலூரில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறுவை தொகுப்பு திட்டம் விவசாயிகளுக்கு வழங்கும் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் குறுவைத் தொகுப்பு திட்டத்தை கடலூர் மாவட்ட விவசாயிகள் 15 பேருக்கு முதல் கட்டமாக வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    எம்.எல்.ஏ.க்க ள்வேல்முருகன்,சபா ராஜே ந்திரன், ராதாகிருஷ்ணன், சிந்தனை செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடுதல் கலெக்டர் மதுபாலன் வரவேற்றார். விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், வேளாண்மை துறை அதிகாரிகள் ரவிச்சந்திரன் ,கென்னடி ஜெபக்குமார், ஜெயக்குமார் ,கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா,துணை மேயர் தாமரைச்செல்வன் ,கடலூர் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் வேளாண்மை த்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது-

    மேட்டூர் அணை திட்டமிட்டு படி திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3 லட்சம் விவசாயிகள் பயனடையும் வகையில் 2.5 லட்சம் ஏக்கருக்கு தேவையான ரசாயன உரங்கள் முழு மானியத்தில் வழங்க உத்திரவிடப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 24 ஆயிரம் ஏக்கருக்கு விதைகள் 50 சதவீத மானியத்தில் வழங்க ரூ. 75 .95 கோடி ஒதுக்கீடு செய்யப்ப ட்டுள்ளது. மேட்டூரில் தண்ணீர் திறப்புக்கு முன்பாகவே தூர்வாரும் பணி அதிரடியாக திட்டமிட்டு 100 சதவீதம் கடைமடை வரை முடிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை தற்போது தண்ணீர் தேவையில்லை. ஆனால் 2 மாதங்களுக்கு பின்பு தான் தண்ணீர் தேவை என்ற நிலை உள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறுவை சாகுபடி அதிகரித்து 5 லட்சம் ஏக்கர் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கர்நாடகாவில் இருந்து பாசனத்திற்கு காவேரி தண்ணீர் பெறும் வேலையை தமிழக முதல்வர் எடுத்து வருகிறார். அதே போன்று கர்நாடகம் தரவேண்டிய தண்ணீரை கேட்டுப் பெற வேண்டிய உரிமை நமக்கு இருக்கிறது. பருவ நிலையில் தற்போதுகர்நாடகாவிலும் மழைப்பொழிவு தொடங்கியுள்ளது. எனவே விவசாயிகள் அச்சப்பட வேண்டாம். குருவை சாகுபடி நடவு பணி கிட்டத்தட்ட 3.5 லட்சம் ஏக்கருக்கு மேல் நடந்து கொண்டிருக்கிறது. நடவு பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை காரணமாக எந்திரங்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு எந்திர நடவிற்கு வேளாண் துறை சார்பில் உரிய கருவிகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. எந்திரம் மூலம் நடவு செய்தால் விதையின் தேவை குறையும். மேலும் செலவும் குறைவு ஏற்படும். அ.தி.மு.க.கட்சி நடத்துவதற்காக எது வேண்டுமானாலும் சொல்லுவார்கள். கடந்த காலங்களில் எங்கு தூர்வாரும் பணி நடைபெற்றது. தண்ணீர் வரும்போது அவசர நிலையில் தூர்வாரினார்கள். ஆனால் தற்போது முன்கூட்டியே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 99 சதவீதம் தூர்வாரும் பணி நடைபெற்று முடிந்துள்ளது.

    மழையின் காரணமாக வரத்து குறைவால் காய்கறி விலைகள் உயர்ந்துள்ளது. டெல்லியிலும் தற்போது தக்காளி உள்ளிட்ட காய்கறி விலைகள் அதிகரித்து உள்ளது. இது சரி செய்யப்படும். சென்னையில் கூட்டுறவுத்துறை மூலம் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. அடுத்த கட்டமாக அனைத்து காலங்களிலும் காய்கறிகள் விளைவிக்க தொழி ல்நுட்பத்தின் வாயிலாகவும் பருவ நிலைக்கு ஏற்ற வகையிலும் சாகுபடி பணிகள் மேற்கொள்ளது குறித்து பல்கலைக்கழக ங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. காய்கறிகளை யார் பதுக்கினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தற்போது அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். இவ்வாறுஅவர் கூறினார்.

    Next Story
    ×