search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாறாந்தையில் சுங்கச்சாவடி அமைத்தால் சட்டப்பூர்வமான போராட்டம்-தென்காசி மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் எச்சரிக்கை
    X

    டி.பி.வி. வைகுண்டராஜா.

    மாறாந்தையில் சுங்கச்சாவடி அமைத்தால் சட்டப்பூர்வமான போராட்டம்-தென்காசி மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் எச்சரிக்கை

    • ஆலங்குளம் அருகே மாறாந்தையில் சுங்கச்சாவடி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை போக்குவரத்து மிகுந்த சாலையாகும்.

    ஆலங்குளம்:

    நெல்லை-தென்காசி இடையே நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. கிட்டத்தட்ட 90 சதவீதம் சாலைப் பணிகள் முடிவடைந்த நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து பணியையும் முடிக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    இப்பணிகளின் ஒரு பகுதியாக, ஆலங்குளம் அருகே மாறாந்தையில் சுங்கச்சாவடி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இங்கு சுங்கச்சாவடி அமைக்க வியாபாரிகள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கன்னியாகுமரி மண்டல தலைவரும், அமைப்பின் தென்காசி மாவட்ட தலைவருமான டி.பி.வி. வைகுண்டராஜா நிருபர்க ளிடம் கூறியதாவது:- ஆலங்குளம் அருகே மாறாந்தையில் சுங்கச்சாவடி அமைப்பது தொடர்பாக அதிகாரிகள் பலமுறை கருத்து கேட்பு கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில் சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரி வித்தோம். இதை பொருட்ப டுத்தாமல் சுங்கச்சாவடி அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை போக்குவரத்து மிகுந்த சாலையாகும். புதிதாக எந்த சாலையும் அமைக்காமல் பழைய சாலையின் இருபுறமும் சற்று விரிவாக்கம் செய்து, சுங்கச்சா வடி அமைத்து சுங்க கட்டணம் வசூலிப்பது சட்டத்திற்கு புறம்பானது.

    மாறாந்தையில் சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூலித்தால் வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள். அனைத்து பொருட்களின் விலையும் உயரும். எனவே சுங்கச்சாவடி அமைப்பதை நிறுத்த வேண்டும். அதையும் மீறி அமைத்தால் எதிர்த்து சட்டப் பூர்வமான போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×