search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வானூர், ஆரோவில் பகுதியில் விபசார  கூடமாக மாறி வரும் தங்கும் விடுதிகள்
    X

    வானூர், ஆரோவில் பகுதியில் விபசார கூடமாக மாறி வரும் தங்கும் விடுதிகள்

    • சுற்றுலா பயணிகளின் வரத்து ஆரோவில் பகுதிகளில் அதிகமாக இருக்கும்.
    • தங்கும் விடுதி ஒன்றில் போலீசார் வருவதை கண்டவுடன் ஒரு பெண் தப்பி ஓடிவிட்டார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே ஆரோவில் சுற்றுலாப் பயணிகளின் புகழ்பெற்ற இடம் ஆகும். மேலும் இந்த பகுதியில் வெளிநாட்டவர் தங்கம் விடுதிகள் ஏராளமாக உள்ளன. இதனால் சுற்றுலா பயணிகளின் வரத்து ஆரோவில் பகுதிகளில் அதிகமாக இருக்கும். ஆரோவில் அருகே குயிலாபாளையம், பட்டானூர் ஆகிய பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தங்குவதற்கு ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. இந்த தங்கும் விடுதிகளில் இரவு நேரங்களில் விபச்சாரம் நடைபெறுவதாக ஆரோவில் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பெயரில் ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையிலான போலீசார் நேற்று இரவு குயிலா பாளையம் பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் சோதனை மேற்கொண்டார். அப்போது பெண் உள்பட2 வாலிபர்களை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். மேலும் இதே போன்று பட்டானூர் பகுதியில் சோதனை செய்தபோது அங்குள்ள தங்கும் விடுதி ஒன்றில் போலீசார் வருவதை கண்டவுடன் ஒரு பெண் தப்பி ஓடிவிட்டார். மேலும் வாலிபர் ஒருவர் போலீசாரிடம் பிடிபட்டார்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்ததில் சிதம்பரத்தை சேர்ந்த சிதம்பரக்கனி (வயது 28), கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த கார்த்தி (22), புவனகிரி பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (29) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் 3 வாலிபர்களையும் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர். பிடிபட்ட பெண் விழுப்புரம் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். வெளிநாட்டு சுற்றுலா பயணியர் அதிகம் கூடும் இடமான ஆரோவில் பகுதியல் உள்ள தங்கும் விடுதிகளில் சமீப காலமாக விபச்சார கூடமாக மாறி வருவது அங்குள்ள பொது மக்களிடையே வருத்தத்தை அளிக்கிறது.

    Next Story
    ×