என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடவள்ளியில் வீட்டில் விபசாரம்; 2 இளம்பெண்கள் மீட்பு
    X

    வடவள்ளியில் வீட்டில் விபசாரம்; 2 இளம்பெண்கள் மீட்பு

    • 2-வது மனைவியுடன் புரோக்கரை போலீசார் கைது செய்தனர்.
    • வாலிபர் ஏ.டி.எம் சென்று பணம் எடுத்து வருவதாக கூறி அங்கிருந்து வடவள்ளி போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுத்தார்.

    கோவை:

    கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த 33 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் தனது நண்பரை சந்திக்க வடவள்ளியை அடுத்த வேடப்பட்டிக்கு சென்றார்.

    அங்கு மின் வாரிய அலுவலகம் முன்பு தனது நண்பருக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், அந்த வாலிபரிடம் எனது வீட்டில் அழகான இளம்பெண்கள் உள்ளனர்.

    உல்லாசம் அனுபவிக்க ஆைசப்பட்டால் அனுபவிக்கலாம் ரூ.550 கொடுத்தால் போதும் என்றார். இதனை கேட்ட அந்த வாலிபர் சரி சென்று கூறி அவருடன் சென்றார்.

    அங்கு சென்ற வாலிபர் அந்த வீட்டையும், அங்கு இருந்த இளம்பெண்களையும் பார்த்தார். பின்னர் அந்த வாலிபர் ஏ.டி.எம் சென்று பணம் எடுத்து வருவதாக கூறி அங்கிருந்து வடவள்ளி போலீஸ் நிலையம் சென்றார்.

    போலீசாரிடம் வேடப்பட்டியில் உள்ள வீட்டில் விபசாரம் நடப்பதாக புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தார்.

    அதில் வீட்டில் கணபதியை சேர்ந்த 36 மற்றும் ஆவராம்பாளையத்தை சேர்ந்த 28 வயது இளம்பெண்களை வைத்து விபசாரம் நடைபெறுவது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த 2 இளம்பெண்களை மீட்டனர்.

    விபசார புரோக்கர்களான வடவள்ளியை அடுத்த வேடப்பட்டியை சேர்ந்த தனசேகரன் (52) மற்றும் அவரது 2-வது மனைவி புங்கொடி (47) ஆகியோரை ைகது செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இளம்பெண்களை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×