search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி சுழற்கோப்பை போட்டி
    X

    தூத்துக்குடியில் ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி சுழற்கோப்பை போட்டி

    • போட்டியை கல்லூரி நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் கே.ஆர். பிரகாஷ் ராஜ்குமார் தொடங்கி வைத்தார்.
    • மாணவிகளுக்கான எறிபந்து போட்டியில் சுப்பையா வித்யாலயம் மகளிர் மகளிர் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்தது.

    தூத்துக்குடி:

    பள்ளி மாணவ -மாணவிகளுக்கான ஹோலி கிராஸ் கல்லூரி சுழற்கோப்பைகான கைப்பந்து மற்றும் எறிபந்து போட்டிகள் ஹோலி கிராஸ் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. போட்டியை கல்லூரி நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் கே.ஆர். பிரகாஷ் ராஜ்குமார் தொடங்கி வைத்தார்.

    மாணவர்களுக்கான கைப்பந்து போட்டியில் கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், போப் நினைவு மேல்நிலைப்பள்ளி 2-ம் இடமும் பெற்றது. மாணவர்களுக்கான எறிபந்து போட்டியில் தூத்துக்குடி கமாக் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், புனித மேரி மேல்நிலைப்பள்ளி 2-ம் இடமும் பெற்றது. மாணவிகளுக்கான கைப்பந்து போட்டியில் தருவைகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடமும், சுப்பையா வித்யாலயம் மகளிர் மேல்நிலைப்பள்ளி 2-ம் இடமும் பெற்றது.

    மாணவிகளுக்கான எறிபந்து போட்டியில் சுப்பையா வித்யாலயம் மகளிர் மகளிர் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 2-ம் இடமும் பெற்றது. போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் அருண்மொழி செல்வி, கல்லூரி உடற்கல்வி இயக்குனர் மெர்சி பத்மாவதி ஆகியோர் முன்னிலையில் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

    வெற்றி பெற்றவர்களை கல்லூரி தாளாளர் டி.எஸ்.கே. ராஜரத்தினம் வாழ்த்தினார். விழாவில் சிறப்பு விருந்தினராக ஸ்டீபன் தியாகராஜன் கலந்து கொண்டார். விழாவில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பிரியா பிரகாஷ் ராஜ்குமார் சுழற்கோப்பைகளையும், தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களையும் வழங்கினார்.

    Next Story
    ×