என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
- இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவை:
இந்து முன்னணியின் துணை அமைப்பான இந்து கலை இலக்கிய முன்னணியின் மாநில பொறுப்பாளர் கனல்கண்ணன் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த வகையில் கோவையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவை மாநகர் மாவட்ட இந்துமுன்னணி சார்பில் காந்திபார்க் ரவுண்டானா பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தசரதன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆறுச்சாமி முன்னிலை வகித்தார். மாநில நிர்வாககுழு உறுப்பினர் சதிஷ், கோட்ட பேச்சாளர்ஆ.கிருஷ்ணன், மாவட்ட பொது செயலாளர் ஜெய்சங்கர், மாவட்ட செயலாளர்கள் மகேஷ்வரன், சோமமேசுந்தரம், மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால் உள்பட 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
Next Story






