என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாவட்ட அறிவியல் மையத்தில் மூலிகை விழிப்புணர்வு நிகழ்ச்சி
- மூலிகைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வானது இந்த மாதம் 1 மற்றும் 3-வது சனிக்கிழமைகளில் நடக்கிறது.
- இதுதொடர்பான விவரங்களுக்கு 94429 94797 என்ற எண்ணில் அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளலாம்.
நெல்லை:
நெல்ைல கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் மூலிகைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
நெல்லை மாவட்ட அறிவியல் மையம் மற்றும் உலக தமிழ் மருத்துவக்கழகம் இணைந்து நடத்தும் மூலிகை முற்றம் 2.0 என்ற மூலிகைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வானது இந்த மாதம் 1 மற்றும் 3-வது சனிக்கிழமைகளில் மாலை 4.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று நடந்த நிகழ்ச்சியில் மஞ்சள் கரிசாலை மூலிகை பற்றிய விளம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் இலவசமாக மூலிகை கன்றுகள் வழங்கப்பட்டது.
இதுதொடர்பான விவரங்களுக்கு 94429 94797 என்ற எண்ணில் அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட அறிவியில் மைய அலுவலர் எஸ்.எம். குமார் தெரிவித்துள்ளார்.
Next Story






