என் மலர்
உள்ளூர் செய்திகள்

மழை
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
- சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
- எழும்பூர், சென்ட்ரல், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.
சென்னை:
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 15 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 22-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யும்.
சென்னையைப் பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
அண்ணாநகர், எழும்பூர், சென்ட்ரல், அசோக்நகர் கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வடபழனி, அரும்பாக்கம், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.






