என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
    X

    மழை

    சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

    • சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
    • திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சென்னை:

    தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு சில மாவட்டங்களில் லேசானது முதல் கன மழை வரை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. எழும்பூர், சென்னை சென்ட்ரல், மதுரவாயல், அம்பத்தூர், போரூர், செம்பரம்பாக்கம் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    காலை முதல் வெப்பத்தால் அவதிப்பட்டு வந்த மக்கள் திடீர் மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×