என் மலர்
உள்ளூர் செய்திகள்

கனமழைக்கு 2 வீடுகள் சேதம்
- டெல்டா மாவட்ட ங்களில் கடந்த 4 நாட்களாகவே கனமழை கொட்டியது.
- இன்று பகலில் மழையின்றி வெளியில் சுட்டெரித்தது.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.
குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கடந்த நான்கு நாட்களாகவே கனமழை கொட்டியது.
தஞ்சை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்தது.
நேற்று மழை பெய்யவில்லை என்றாலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
ஆனால் இன்று பகலில் மழையின்றி வெளியில் சுட்டெரித்தது.
இருந்தாலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்த மழையால் 2 ஓட்டு வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளது.
மாவட்டத்தில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு மி.மீ.யில் வருமாறு:-
மஞ்சளாறு -18.60, ஒரத்தநாடு -4.20, வெட்டிக்காடு -3.60, கும்பகோணம் -3, திருவிடைமருதூர் -2.30, அய்யம்பேட்டை -2.
Next Story






