என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயான கொள்ளைத்திருவிழா
    X

    மயான கொள்ளைத்திருவிழா

    • அம்மன் கோவில் மயானக் கொள்ளைத் திருவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
    • சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மயானக் கொள்ளைத் திருவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது-. இதையொட்டி நேற்று காலை ஹோமங்கள், மற்றும் சிறப்பு பூஜைகளுடன் கோவில் வளாகத்தில் கொடி ஏற்றப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    தொடர்ந்து கோவில் திருப்பணி பணியாளர்கள் அனைவருக்கும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது. மாலை 6 மணிக்கு அங்குரார்ப்பணம், முளைப்பாரி எடுத்தல், யாகசாலை பிரவேசம், மகா கணபதி ஹோமம், மற்றும் பூஜைகளுடன் அம்மனுக்கு பொங்கல் வைக்கப்பட்டது. இதில், 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டு வழிபட்டனர். இன்று மஹா சிவராத்திரியும், நாளை சூலம் போடுதல் நிகழ்ச்சியும், அம்மன் மயான கொள்ளைக்கு புறப்படுதலும் நடைபெற உள்ளது. இதே போல் காவேரிப்பட்டணம் தாம்சன்பேட்டை பூங்காவனத்தம்மன் கோயில் மற்றும் பன்னீர் செல்வம் தெருவில் உள்ள அங்காளம்மன் கோயிலில், மயான கொள்ளைத் திருவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×