என் மலர்
உள்ளூர் செய்திகள்

புல்லரம்பாக்கம் ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்: கலெக்டர் பங்கேற்பு
- கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன் தலைமை தாங்கினார்.
- ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. புல்லரம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்த கூட்டத்தில், ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், செலவினங்கள், ஏற்கனவே செய்து முடிக்கப்பட்ட பணிகளின் விவரங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, திருவள்ளூர் சப்-கலெக்டர் மகாபாரதி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ராஜேந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எபிநேசன், தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெபக்குமாரி அனி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் ரூபேஷ் குமார், திருவள்ளூர் ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பேபி மனோகரன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பல்வேறு துறையை சேர்ந்த திரளான அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.






