search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அக்னிபாத் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்- ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
    X

    அக்னிபாத் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்- ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

    • கூடங்குளத்தில் அணு உலைக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதற்கு எக்காரணம் கொண்டும் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக் கூடாது.
    • தமிழக அரசு சிறப்பு பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளைச் சீரமைக்க வேண்டும்.

    சென்னை:

    ம.தி.மு.க. உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை, தலைமை நிலையம் தாயகத்தில் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் நடைபெற்றது.

    வைகோ முன்னிலையில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழாவை சென்னையில், அண்ணா கலையரங்கில் நடத்துவது. ஜனாதிபதி தேர்தலில் நீண்ட நெடிய பாராளுமன்ற அனுபவமும், கொள்கை உறுதியும் மிக்க யஷ்வந்த் சின்காவுக்கு ம.தி.மு.க. ஆதரவு அளிப்பது. உறுப்பினர் சேர்ப்புப் பணியை வரும் ஜூலை 31-ந்தேதிக்குள் விரைந்து முடித்து, உறுப்பினர்படி வங்களை உரிய தொகையுடன் தலைமைக் கழகத்தில் சேர்த்திட வேண்டும்.

    காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து நிகழ்ச்சி நிரலில் மீண்டும் சேர்க்கப்பட்டால், அக்கூட்டத்தை தமிழக அரசு புறக்கணிக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கை துரிதப்படுத்த வேண்டும்.

    சங் பரிவாரங்களின் கனவான இந்துராஷ்டிரத்தின் காலாட்படையாக, காவிப்படையாக இந்திய ராணுவத்தை மாற்றும் முயற்சிக்கு இக்கூட்டம் கடும் கண்டனம் தெரி விப்பதுடன், 'அக்னி பாதை' திட்டத்தைக் கைவிட வலியுறுத்துகிறது.

    கூடங்குளத்தில் அணு உலைக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதற்கு எக்காரணம் கொண்டும் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக் கூடாது. மேலும் கூடங்குளத்தில் அமையும் 3-வது மற்றும் 4-வது அலகு அணுஉலைகளுக்கு மாசுக்கட்டுபாட்டு வாரியம் அளித்துள்ள அனுமதி யையும் நிறுத்தி வைக்க வேண்டும்.

    நூல் விலை உயர்வைத் தடுக்கத் தவறிய ஒன்றிய அரசுக்கு இக்கூட்டம் கண்ட னம் தெரிவிக்கிறது.

    தமிழக அரசு சிறப்புப் பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளைச் சீரமைக்க வேண்டும்.

    மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×