search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. ஆட்சியில் அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது-சண்முகையா எம்.எல்.ஏ. பேச்சு
    X

    கூட்டத்தில் சண்முகையா எம்.எல்.ஏ. பேசிய காட்சி.

    தி.மு.க. ஆட்சியில் அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது-சண்முகையா எம்.எல்.ஏ. பேச்சு

    • அரசுப் பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரியில் சேர தனி ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
    • அ.தி.மு.க. ஆட்சியில் மகளிர் சுய உதவி குழு இல்லாத நிலை ஏற்பட்டிருந்தது.

    ஓட்டப்பிடாரம்:

    ஒட்டப்பிடாரம் தி.மு.க. மேற்கு ஒன்றியம் சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஒட்டநத்தம் கிராம் விநாயகர் கோவில் திடலில் முன்பு நடந்தது. சண்முகையா எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சந்திரசேகர், ஒட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வைத்தார். மாவட்ட பிரதிநிதி சோசுப மோகன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் சண்முகையா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    மாதம் ரூ. 1000

    தி.மு.க அரசின் இரண்டு ஆண்டுகளில் மக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. கல்லூரி படிக்கும் பெண்களுக்கு புதுமைப் பெண் திட்ட மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

    அரசுப் பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளுக்கு அரசு மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கு தனி ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதனால் அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் மகளிர் சுய உதவி குழு இல்லாத நிலை ஏற்பட்டிருந்தது.

    தி.மு.க. ஆட்சியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தொழில்கள் கடன் வழங்குவது மூலம் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கலந்து கொண்டவர்கள்

    கூட்டத்தில் மாநில அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணை செயலாளர் சிவராஜ், தமிழக அரசின் 2 ஆண்டுகள் சாதனைகள் குறித்தும், மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் பேசினார்.

    கூட்டத்தில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூரமணி, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முத்துக்குமார், யூனியன் கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன், கொடியன்குளம் பஞ்சாயத்து தலைவர் அருண்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய துணைச் செயலாளர் சிவா நன்றி கூறினார்.

    Next Story
    ×