search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    அரசு பஸ் கவிழ்ந்து விபத்து
    X

    நாழிக்கல் பகுதியில் ஏரிகரையோரம் பஸ் கவிழ்ந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

    அரசு பஸ் கவிழ்ந்து விபத்து

    • ஏரிகரை–யோரத்தில் உள்ள பள்ளத்தில் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் கவிழ்ந்து விபத்துக்–குள்ளானது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த 5 பேரை உத்தனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலைத்திற்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    சூளகிரி,

    தருமபுரி புறநகர் பஸ் நிலையத்தில் இருந்து இன்று காலை 67 பயணிகளை ஏற்றிக்கொண்டு பெங்களூருவுக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது.

    அந்த பஸ்சை தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த டிரைவர் ஜெயவேல் (வயது47) என்பவர் ஓட்டி சென்றார். பஸ்சில் தருமபுரியைச் சேர்ந்த கண்டக்டர் ஜெயராமன் (57) என்பவர் உடன் சென்றார்.

    அந்த பஸ் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த உத்தனப்பள்ளி வழியாக இன்று காலை சென்றது. அப்போது அந்த பஸ் நாழிக்கல் அருகே வந்தபோது பின்னால் வந்த தனியார் கல்லூரி பஸ் ஹாரன் அடித்தபடியே வந்தது.

    உடனே அரசு பஸ் டிரைவர் ஜெயவேல் பஸ்சை ஓரமாக ஓட்டி சென்று பின்னால் வந்த கல்லூரி பஸ்சிற்கு வழி விட்டார். அப்போது அப்பகுதியில் ஏரிகரை–யோரத்தில் உள்ள பள்ளத்தில் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் கவிழ்ந்து விபத்துக்–குள்ளானது.

    இதில் பஸ்சில் இருந்த பயணிகள் அய்யோ, அம்மா என்று அலறினர். அவரது அலறல் சத்தம் கேட்டு முன்னால் சென்ற கல்லூரி வாகனத்தில் இருந்த டிரைவர் மற்றும் மாணவர்கள், அந்த வழியாக சென்றவர்கள் ஆகியோர் திரண்டு வந்து பஸ்சில் இருந்து பயணிகளை பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் டிரைவர் ஜெயவேல், கண்டக்டர் ஜெயராமன் உள்பட 5 பேருக்கு காயம் ஏற்பட்டது.

    இந்த விபத்து குறித்து தகவலறிந்த உத்தனப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த 5 பேரை உத்தனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலைத்திற்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். பஸ்சில் இருந்த மற்ற பயணிகளை மீட்டு மாற்று பஸ்சில் போலீசார் ஏற்றி விட்டனர். இதைத்தொடர்ந்து பஸ்சை மீட்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டனர் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்து நடந்த இடத்தில் அருகே ஏரி உள்ளது. அந்த ஏரி தற்போது தண்ணீரின்றி வறண்டு காணப்படுவதால், பள்ளம் மிகுந்த அந்த ஏரியில் அரசு பஸ் அடுத்தடுத்து உருண்டு கவிழ்ந்து இருந்தால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும், அதிர்ஷ்ட–வசமாக பஸ் ஏரிகரை–யோரத்தில் மட்டும் கவிழ்ந்ததால் பயணிகளின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாமல் சிறு,சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

    இந்த சம்பவத்தால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×