search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழனி கோவிலில் 250க்கும் மேற்பட்டோர் தங்கரதம் இழுத்து வழிபாடு
    X

    பழனி கோவிலில் 250க்கும் மேற்பட்டோர் தங்கரதம் இழுத்து வழிபாடு

    • நேற்று விடுமுறை தினம் என்பதால் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
    • சுமார் 250க்கும் மேற்பட்டோர் ரூ.2000 கட்டணம் செலுத்தி தங்கரதம் இழுத்து வழிபட்டனர்.

    பழனி:

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் தினந்தோறும் மலைக்கோவிலில் தங்கரதம் இழுத்து வழிபாடு செய்வது வழக்கம். இதற்காக ரூ.2000 கட்டணம் செலுத்தி பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.

    சாதாரண நாட்களில் சராசரியாக 100 பக்தர்கள் வரை தங்க ரதம் இழுத்து வழிபாடு செய்வார்கள். சித்ரா பவுர்ணமி, மாத கார்த்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கட்டணம் செலுத்தி தங்கரதம் இழுத்து வழிபாடுவார்கள்.

    இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். சுமார் 250க்கும் மேற்பட்டோர் ரூ.2000 கட்டணம் செலுத்தி தங்கரதம் இழுத்து வழிபட்டனர். இதனால் மலைக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    மேலும் நேற்று முதல் கோர்ட்டு உத்தரவுப்படி செல்போன் மற்றும் கேமராக்களுக்கு கட்டணம் வசூலித்து அவை பாதுகாப்பு அறையில் வாங்கி வைக்கப்பட்டதால் கூட்ட நெரிசல் அதிகரித்தது.

    கோவில் பாதுகாப்பு அலுவலர்கள் பக்தர்களிடம் சோதனை நடத்தி செல்போன் மற்றும் கேமராக்களை வாங்கி வைத்தனர். அதனால் கூட்டம் அதிகரித்ததால் சோதனை நடத்துவது நிறுத்தப்பட்டு மீண்டும் பணிகள் தொடங்கியது.

    இரவு 10 மணி வரையிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பஸ் நிலையத்தில் வெளியூர் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து தங்கள் ஊர்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.

    Next Story
    ×