என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

4 தமிழக மீனவர்களை உடனே மீட்க வேண்டும்- ஜி.கே.வாசன் அறிக்கை

- மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.
- இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள 4 தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நேற்று முன் தினம் நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் இருந்து விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை சிறைப்பிடித்து சென்றனர். இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடித்து செல்வது நீடித்து வரும் வேளையில் இப்போது மீண்டும் தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை அரசின் நியாயமற்ற நடவடிக்கையாகும். இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள 4 தமிழக மீனவர்களையும், 2 படகுகளையும் உடனடியாக மீட்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.