என் மலர்
உள்ளூர் செய்திகள்

நிதி நிறுவனங்கள் மோசடி- காஞ்சிரத்தில் ஜி.கே.வாசன் ஆர்ப்பாட்டம்
- பிரபல நிதி நிறுவனங்கள் பொதுமக்கள் செலுத்திய பணத்தை சுருட்டி மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
- மோசடி நிதி நிறுவனங்களை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்ட பிரபல நிதி நிறுவனங்கள் பொதுமக்கள் செலுத்திய பணத்தை சுருட்டி மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
இந்த பணத்தை பொதுமக்களிடம் திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்க கோரியும், மோசடி நிதி நிறுவனங்களை கண்டித்தும் காஞ்சிபுரம் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் மலையூர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசும்போது, 'பணம் பறித்த நிறுவனங்களின் நிர்வாகிகளிடம் இருந்து பணத்தைப் பெற்று அப்பாவி பொதுமக்களிடம் அரசு திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வட்டியுடன் திருப்பி தர வேண்டும் என்றார்.
இதில், மாநகர தலைவர் சுகுமார், மாநிலத் துணைத்தலைவர் இ.எஸ்.எஸ். ராமன், மாநில துணை பொது செயலாளர் விடியல் சேகர், மாநில நிர்வாகிகள் ஸ்ரீகாந்த், சங்கர், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் விஷார், கார்த்தி, ஜி.கே. கஜா, சசிகுமார், மாடசாமி, யுவகுமார், யுவராஜ் ,ரஜினி, சுதர்சன் பாஸ்கர், சசிகுமார், தென்னவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






