என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கஞ்சா விற்ற 2 பேர் கைது
  X

  கஞ்சா விற்ற 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஏரிக்கரை பகுதியில் ஒரு பையில் கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.
  • மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

  வண்டலூர்:

  செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள ஏரிக்கரை ஓரம் கஞ்சா விற்கப்படுவதாக மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் பார்த்தபோது ஏரிக்கரை பகுதியில் ஒரு பையில் கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.

  விசாரணையில் அவர்கள் சித்தாமூர் பகுதியை சேர்ந்த பாலாஜி (வயது 26), வல்லம் பகுதியை சேர்ந்த மதியழகன் (26) என்பது தெரியவந்தது. அவர்கள் விற்பனைக்காக 510 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

  இதனைத்தொடர்ந்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

  Next Story
  ×