என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  முத்துப்பேட்டையில், போலீஸ் பாதுகாப்புடன் நடந்த விநாயகர் ஊர்வலம்
  X

  போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் ஊர்வலம் நடந்தது.

  முத்துப்பேட்டையில், போலீஸ் பாதுகாப்புடன் நடந்த விநாயகர் ஊர்வலம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தெற்குக்காடு, அரமங்காடு, மருதங்காவெளி உட்பட 19 பகுதிகளிலிருந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் விநாயகர் சிலைகள் எடுத்து வரப்பட்டது.
  • மிகவும் பதற்றமான பகுதியாக கருதப்படும் நியூபஜார், கொய்யாமுக்கம், பங்களா வாசல், ஓடக்கரை வழியாக செம்படவன்காடு சென்று பாமினி ஆற்றில் கரைக்கப்பட்டது.

  முத்துப்பேட்டை:

  திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும்.

  இந்த விநாயகர் ஊர்வலம் தமிழகத்தில் பிரபல விநாயகர் ஊர்வலங்களில் ஒன்றாகும்.

  இந்தாண்டு விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு நேற்று 30ம்ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.

  இதற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தெட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார்.

  முன்னதாக இந்து முன்னணி ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார்.

  அனைத்து கிராம கமிட்டி ஒருங்கினைப்பு குழுத் தலைவர் சிவபிரகாஷம், தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற கழக துணைத்தலைவர் ராம்பிரபு, இந்து முன்னணி மாவட்ட செயலாளர் நாடிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  சிதம்பரம் ராமஜெயம் அறக்கட்டளை நிறுவனர் ராமகிரு ஷ்ணன் ஊர்வல த்தை துவக்கி துவக்கி வைத்தார்.

  இதில் சிறப்பு அழைப்பாளராகளாக பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநில நிர்வாகி ஜீவஜோதி, தென் இந்திய பார்வர்ட் ப்ளாக் கட்சி நிறுவனர் திருமாறன், பாஜக மேலிட பார்வையாளர் பேட்டை சிவா, மாவட்ட துணைத்தலைவர் மாரிமுத்து ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

  ஊர்வலத்தில் உப்பூர், ஆலங்காடு, தில்லைவிளாகம், ஜாம்புவானோடை, கல்லடி க்கொல்லை, தெற்குக்காடு, அரமங்காடு, மருதங்காவெளி உட்பட 19பகுதிகளிலிருந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் விநாயகர் சிலைகள் எடுத்து வரப்பட்டது.

  ஊர்வலம் ஜாம்புவானோடை வடக்காடு சிவன் கோவிலிருந்து புறப்பட்டு வைரவன் சோலை, ஜாம்புவானோடை தர்ஹா, மேலக்காடு, கோரை ஆற்றுபாலம் பகுதி வழியாக பதற்றம் நிறைந்த முத்துப்பேட்டை ஆசாத்நகர் சென்று அங்கிருந்து திருத்துறைப்பூண்டி சாலை, பழைய பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து மிகவும் பதற்றமான பகுதியாக கருதப்படும் பட்டுக்கோட்டை சாலையில் உள்ள நியூபஜார், கொய்யா முக்கம், பங்களா வாசல், ஓடக்கரை வழியாக செம்படவன்காடு சென்று அங்குள்ள பாமினி ஆற்றில் இரவு கரைக்கப்பட்டது.

  ஊர்வலத்தை முன்னிட்டு திருச்சி சரக ஐ.ஜி. சந்தோஷ் குமார், திருச்சி டிஐஜி சரவணக்குமார், தஞ்சை டிஐஜி கயல்விழி, திருவாரூர் எஸ்.பி.சுரேஷ்குமார், தஞ்சை எஸ்பி ரவளி பிரியா, கரூர் எஸ்பி சுந்தரவதனம், திருநெல்வேலி எஸ்பி சீனிவாசன், நாகை எஸ்பி ஜவகர், சென்னை எஸ்பிகள் துரை, ஜெயசந்திரன், அரியலூர் எஸ்பி புரோஸ் அப்துல்லா, புதுக்கோட்டை எஸ்பி வஞ்சிதா பாண்டி, மயிலாடுதுறை எஸ்பி நிஷா உட்பட 10 எஸ்பிகள், 10ஏடிஎஸ்பி, 37டிஎஸ்பிகள், 38 இன்ஸ்பெக்டர்கள், 334 சப்இன்ஸ்பெக்டர்கள், 1464 தமிழ்நாடு காவல்படை போலீசார், 280 பயிற்சி காவலர்கள், 530 சிறப்பு காவலர்கள், 140போக்குவரத்து காவலர்கள், 25 வெடிகுண்டு நிபுணர்கள், 285 ஆயுதப்படை காவலர்கள், நூறு ஊர் காவல்படையினர் உட்பட திருச்சி மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களை சேர்ந்த சுமார் 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

  Next Story
  ×