என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊட்டி மஞ்சனக்கொரையில் இலவச மருத்துவ முகாம்
- முகாமுக்கு டாக்டர் பவிஷ் தலைமை தாங்கினார்.
- ரத்த பரிசோதனை உள்பட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி மஞ்சனக்கொரையில், தி.மு.க தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நீலகிரி மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் ஆலோசனைப்படி நீலகிரி மாவட்ட மருத்துவரணி சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமுக்கு டாக்டர் பவிஷ் தலைமை தாங்கினார்.
இதில் ரத்த பரிசோதனை, ரத்த சர்க்கரை அளவு, ரத்த சோகை, ரத்த அழுத்தம் உள்பட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. முகாமில் மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர்கள் ரூபேஷ், ராமச்சந்திரன், சுப்பிரமணி, உன்னிகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






