என் மலர்
உள்ளூர் செய்திகள்

கல்லூரியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
கல்லூரியில் இலவச கண் பரிசோதனை முகாம்
- அலுவலக பணியாளர்கள், நடத்துனர், ஓட்டுநர் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
- 1000-க்கும் மேற்பட்ட அனைத்து துறை மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தஞ்சாவூர்:
கும்பகோணம், இதயா மகளிர் கல்லூரி, பெண்கள் பாசறை மற்றும் வாசன் கண் மருத்துவமனை, கும்பகோணம் சார்பாக இதயா மகளிர் கல்லூரியில் உள்ள மாணவிகள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், நடத்துனர், ஓட்டுநர் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்வை கல்லூரி யின் முதல்வர் அருட்சகோதரி முனைவர். யூஜின் அமலா தொடங்கி வைத்தார். கணினிஅறிவியல் துறை தலைவர் மற்றும் பெண்கள் பாசறை ஒருங்கிணை ப்பாளர் முனைவர்.சி.பிரமிளா ரோசி, கணினி அறிவியல் துறை பேராசிரியர் முனைவர் கே. புவனேஸ்வரி மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் 1000-க்கும் மேற்பட்ட அனைத்து துறை மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
Next Story