என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரிக் வண்டி மேலாளரிடம் ரூ.12 லட்சம் மோசடி
- வாட்ஸ் அப் எண்ணுக்கு கர்நாடக அரசு மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக குறுந்தகவல் வந்தது.
- முன்பணமாக ரூ.6 லட்சம் செலுத்துங்கள் என கூறியுள்ளார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் சீராப்பள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட தேவஸ்தான புதூரை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 48). ரிக் வண்டி மேலாளர்.
இவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு கர்நாடக அரசு மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக குறுந்தகவல் வந்தது.
இதனை நம்பிய அவர், சம்பந்தப்பட்ட எண்ணில் தொடர்பு கொண்டு தனது மகளுக்கு சீட் வாங்கி தருமாறு கேட்டார்.
அதற்கு எதிர்முணையில் பேசிய நபர் சில ஆவணங்களை வாங்கிக்–கொண்டு சம்மதம் தெரிவித்தார். சில நாட்கள் கழித்து, போனில் பேசிய அந்த நபர், முத்துசாமியிடம், உங்கள் மகள் நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டார்.
எனவே முன்பணமாக ரூ.6 லட்சம் செலுத்துங்கள் என கூறியுள்ளார். மீண்டும் சில நாட்கள் கழித்து மருத்துவ சீட் கிடைத்து விட்டது. எனவே மேலும் ரூ. 6 லட்சம் கட்ட செல்லி உள்ளார்.
அவரது பேச்சை நம்பிய முத்துசாமி, ரூ.12 லட்சத்தையும் கட்டி–யுள்ளார். ஆனால் நீண்ட நாட்களாகியும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை.
அத்துடன் சம்பந்தப்பட்ட செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முத்துசாமி, இது குறித்து நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.