என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆய்க்குடியில்  புதிய கால்நடை மருந்தகம் அடிக்கல் நாட்டு விழா
    X

     தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லதுரை அடிக்கல் நாட்டிய காட்சி.

    ஆய்க்குடியில் புதிய கால்நடை மருந்தகம் அடிக்கல் நாட்டு விழா

    • தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லதுரை தலைமை தாங்கி கால்நடை மருந்தகம் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
    • சிறப்பு விருந்தினர்களாக ஆய்க்குடி பேரூராட்சி மன்ற தலைவர் சுந்தரராஜன், துணைத் தலைவர் மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம், ஆய்க்குடி பேரூராட்சி பகுதியில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ரூ. 48 லட்சம் செலவில் புதிய கால்நடை மருந்தகம் கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லதுரை தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சிக்கு நெல்லை மண்டல கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் டாக்டர் பொன்னு வேல், கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் டாக்டர் மகேஸ்வரி, தென்காசி மாவட்ட உதவி இயக்குனர் சங்கரன்கோவில் டாக்டர் ரகுமத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஆய்க்குடி பேரூராட்சி மன்ற தலைவர் சுந்தரராஜன், துணைத் தலைவர் மாரியப்பன், கடையநல்லூர் நகராட்சி தலைவர் ஹபிப்பூர் ரகுமான், கடையநல்லூர் ஒன்றிய துணைத் தலைவர் ஐவேந்திரன், ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுரேஷ், நகர தி.மு.க. செயலாளர் அப்பாஸ், செங்கோட்டை ஒன்றிய கவுன்சிலர் பகவதி, ஆய்க்குடி பேரூராட்சி மன்ற உறுப்பினர் புனமாலை ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் கால்நடை மருத்துவர்கள் செல்வ குத்தாலிங்கம், சிவக்குமார், வசந்த மலர், சுவாமிநாதன், செல்லப்பா, குமாரசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×