என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு கட்டுமானத் தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம்
    X

    கிருஷ்ணகிரியில் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு கட்டுமானத் தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம்

    • வயது 18 வயதிலிருந்து 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.
    • ஒருவார கால திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.800- ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.

    கிருஷ்ணகிரி,

    திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு கட்டுமான தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு கட்டுமான கழகத்தின் சார்பில் கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாதம் மற்றும் ஒரு வார கால திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து மூன்று ஆண்டு பதிவு மூப்பு பெற்ற தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம்.

    கல்வித் தகுதி 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மற்றும் ஐ.டி.ஐ. படிப்பும் இருக்கலாம். தமிழ் மொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க. வேண்டும். வயது 18 வயதிலிருந்து 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். இப்பயிற்சிக்கு வழங்கப்படும் தொழில்கள் கொத்தனார், பற்றவைப்பவர், மின்சாரப் பயிற்சி, குழாய் பொருத்துதல், மரவேலை, செய்பவர் மற்றும் கம்பி வளைப்பவர் ஆகும். பயிற்சிக்கான கட்டணம், உணவு மற்றும் தங்குமிடம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.

    பயிற்சி பெறும் அனைவருக்கும் எல் அண்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிலையத்தால் 100 சதவீத வேலை வாய்ப்பினை உறுதி செய்துள்ளது. 3 மாத பயிற்சியில் முதல் மாதம் காஞ்சிபுரம் மாவட்டம் தையூரில் உள்ள கட்டுமான கழகப்பயிற்சி நிறுவனத்திலும் அடுத்து 2 மாதங்கள் காஞ்சிபுரம் மாவட்டம் நீவழுரில் உள்ள எல் அண்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிலையத்திலும் நடைபெறும்.மேற்படி ஒருவார கால திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.800- ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.

    இத்தொகையில் உணவுக்கும் மட்டும் பிடித்தம் செய்யப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய அடையாள அட்டை, கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை உள்ளிட்ட நகல்களுடன் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சேலம் மெயின் ரோடு, எல்.ஐ.சி. அலுவலகம் அருகில், கிருஷ்ணகிரி - 635 001 (தொலைபேசி எண்: 04343 -231321) என்ற அலுவலக முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×