என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தென்காசியில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி
  X

  கண்காட்சியில் இடம்பெற்ற பூலித்தேவன் புகைப்படம் அருகில் நின்று மாணவ- மாணவிகள் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

  தென்காசியில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சிறப்பு விருந்தினராக வெங்கடாம்பட்டி ஊராட்சி தலைவர் சாருகலா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
  • நிகழ்ச்சியில் ஸ்ரீ விநாயகா குழுவினரின் தப்பாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

  தென்காசி:

  தென்காசி இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக வெங்கடாம்பட்டி ஊராட்சி தலைவர் சாருகலா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

  நிகழ்ச்சியில் ஸ்ரீ விநாயகா குழுவினரின் தப்பாட்டம், பெஸ்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவ -மாணவிகளின் கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம் , நாட்டுப்புற நடனம், கும்மி பாடல் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் சமூக நலத்துறையின் ஒன் ஸ்டாப் சென்டர் சார்பில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப டுத்தும் பொம்மைகள் பேசும் நிகழ்ச்சி உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கண்காட்சியில் இடம்பெற்ற பூலித்தேவன் மற்றும் முதல்-அமைச்சர் புகைப்படம் அருகில் நின்று மாணவ- மாணவிகள் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

  Next Story
  ×