என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கொள்ளிடம் ஆறுகளில் வெள்ள அபாயம்; பாதுகாப்பாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தல்
- வெண்ணாறு ஆறுகளின் கரையோர கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஆற்றில் இறங்காமல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
- கால்நடைகளை குளிப்பாட்டுவதற்காகவும், மேய்ச்சலுக்காகவும் ஆற்றுப்பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டாம்.
திருவையாறு:
திருவையாறு தாசில்தார் பழனியப்பன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் அரசாபகரன், ஊராட்சி ஒன்றிய் ஆணையர்கள் நந்தினி, கென்னடி, பேரூராட்சி தலைவர் கஸ்தூரி நாகராஜன், மற்றும் செயல் அலுவலர் சோமசுந்தரம் ஆகியோர் மழை, வெள்ளப் பெருக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பொதுமக்களுக்கு கூறியுருப்பதாவது,
தற்போது கர்நாடக மாநிலத்திலும் தமிழ்நாட்டிலும் தொடர்ந்து பெய்துவரும் கனமழையினால் காவிரியில் அதிகமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால் மேட்டூர் அணையிலிருந்து தமிழக காவிரி ஆற்றில் 1,85,000 கனஅடி அளவு தண்ணீர் திறக்கப்பட்டு கரைபுரண்டு வந்துகொண்டிருக்கிறது.
இதனால், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டாரத்தில் ஓடுகிற கொள்ளிடம், காவிரி, குடமுருட்டி, வெட்டாறு, மற்றும் வெண்ணாறு ஆகிய ஆறுகளில் அதிகளவு வெள்ளம் வந்து கொண்டிருக்கிறது.
எனவே, திருவையாறு பேரூராட்சி எல்லைக்குட்பட்ட ஸ்ரீராம் நகர், 15 மண்டபத்தெரு, புதுஅக்ரஹாரம், புஷ்யம ண்டபத்தெரு, திருமஞ்சனவீதி, செவ்வாய்க்கிழமைத் தெரு, தியாகராஜர் காலனி, மற்றும் அகிலாண்டபுரம் ஆகிய காவிரிக் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், திருவையாறு வட்டாரத்தில் கொள்ளிடம், காவிரி, குடமுருட்டி, வெட்டாறு மற்றும் வெண்ணாறு ஆகிய ஆறுகளின் கரையோரங்களைச் சார்ந்த கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களும் ஆற்றில் இறங்காமல் முன்னெச்ச ரிக்கையுடன் இருக்குமாறும்.
கால்நடைகளை குளிப்பாட்டுவதற்காக ஆற்றில் இறக்க வேண்டாம் என்றும், மேய்ச்சலுக்காக கால்நடைகளைஆற்றுப் பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்றும், ஆற்றில் அதிக வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்படும்போது மேட்டுப்பாங்கான இடங்களு க்கும், அரசுத்துறையினரின் வழிகாட்டுதலின்படி அருகாமையில் உள்ள பள்ளிகள் மற்றும் சமுதாயக் கூடங்களுக்கும் சென்று பாதுகாத்துக் கொள்ளுமாறும், ஆற்றின் கரைகளில் உடைப்பு ஏற்படும் அபாயம் நேரிட்டால் உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஊராட்சி மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கவும் வேண்டுமாறும் கூறியுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்