என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்- நாளை மறுநாள் நடக்கிறது
- நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
- பிப்ரவரி 4-ந்தேதி தைப்பூச தீர்த்தவாரி திருவிழா நடைபெறுகிறது.
நெல்லை:
நெல்லை நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
கொடியேற்றம்
இதேபோல் இந்த ஆண்டு தைப்பூச திருவிழா வருகிற 26-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்து டன் தொடங்குகிறது.
4-ம் நாளான 29-ந்தேதி நண்பகல் 12 மணிக்கு நெல்லுக்கு வேலியிட்ட திருவிழாவும், இரவு 8 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி, அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது.
பிப்ரவரி 4-ந்தேதி தைப்பூச தீர்த்தவாரி திருவிழா வரலாற்று சிறப்புமிக்க கைலாசபுரத்தில் உள்ள தீர்த்தவாரி மண்டபத்தில் நடைபெறுகிறது. இதற்காக சுவாமி நெல்லையப்பர், காந்திமதியம்மன், அகஸ்தியர், தாமிரபரணி, குங்கிலிய நாயனார், சண்டிகேஸ்வரர், அஸ்திரதேவர், அஸ்திரதேவி ஆகிய மூர்த்திகள் 4-ந்தேதி நண்பகல் 12.30 மணிக்கு சுவாமி நெல்லையப்பர் கோவிலில் இருந்து புறப்பட்டு எஸ்.என்.ஹைரோடு, திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ்பாலம் வழியாக கைலாசபுரத்தை வந்தடைவர்.
தாமிரபரணியில் தீர்த்தவாரி முடிந்து விஷேச தீபாராதனைக்கு பின்பு மாலை 6 மணிக்கு சுவாமிகள் மீண்டும் புறப்பட்டு எஸ்.என்.ஹைரோடு வழியாக பாரதியார் தெரு, தெற்கு புதுத்தெரு, ரத வீதி சுற்றி கோவிலுக்கு வந்தடைவார்.
பிப்ரவரி 5-ந்தேதி சவுந்தர சபா மண்டபத்தில் பிருங்கி ரத முனி சிரேஷ்டர்களுக்கு திருநடனம் காட்டியருளும் சவுந்தர சபா நடராஜர் நடனக்காட்சி நடைபெறுகிறது. 6-ந்தேதி சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சந்திர புஷ்கரணி என்ற வெளித் தெப்பக்குளத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் இரவு 7 மணிக்கு தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர்சிவமணி மற்றும் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.