என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவிலில் கொடியேற்றம் நடந்தது.
திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரவிழா கொடியேற்றம்

- விநாயகர் மற்றும் பஞ்ச மூர்த்திகள் கொடிமரத்தின் முன்பு எழுந்தருளினர்.
- திருவிழா நாட்களில் தினமும் காலையும் இரவும் சுவாமி வீதி உலா நடைபெறும்.
பூதலூர்:
திருக்காட்டுப்பள்ளியில் அக்னீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.இத் திருக்கோயிலில் வருடம் தோறும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடைபெறும். திருவிழாவை ஒட்டி துவஜாரோகணம் என்னும் கொடியேற்று நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது.
கொடியேற்ற நிகழ்ச்சியை ஒட்டி விநாயகர் மற்றும் பஞ்ச மூர்த்திகள் சிறிய தேரில் கொடி மரத்தின் முன்னே வீற்றிருந்தனர்.
சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கொடி மரத்திற்கு பல்வேறு திரவங்களால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க பங்குனி உத்திர திருவிழா தொடக்கமாக கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பங்குனி உத்திர பெருவிழா குழு தலைவர் வக்கீல் ஜெயக்குமார், பேரூராட்சி தலைவர் மெய்யழகன், பேரூராட்சி செயல் அலுவலர் நெடுஞ்செழியன், பேரூராட்சி துணைத்தலைவர் ரமணி, பங்குனி உத்திர பெருவிழா குழு பொதுச்செயலாளர் ஜெயராமன், பொருளாளர் ராஜேஸ்வரன், மற்றும் பங்குனி உத்திர பெருவிழா குழு நிர்வாகிகள் இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து நேற்று இரவு பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது.
திருவிழா நாட்களில் தினமும் காலையும் இரவும் சுவாமி வீதி உலா நடைபெறும்.
பங்குனி உத்திர நாளான அடுத்த மாதம் (ஏப்ரல்) நான்காம் தேதி காலை கோவிலில் இருந்துவிநாயகர், சௌந்தரநாயகி அம்பாள் சமேத அக்னீஸ்வரர், சோமாஸ் கந்தர், வள்ளி தெய்வானை சமேத முருகன், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளும் மலர் அலங்காரத்துடன் கோவிலிலிருந்து கோபுர தரிசனம் கண்டு பல்வேறு இசை நிகழ்ச்சிகளுடன் திருக்காட்டுப்பள்ளி மற்றும் ஒன்பத்துவேலி வீதிகளில் உலா வரும்.மாலை பஞ்சமூர்த்திகளும் காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார பந்தலில் எழுந்தருள செய்து மகா அபிஷேகம் நடைபெறும்.
பின்னர் இசை கச்சேரிகள் வாண வேடிக்கைகள் நடைபெறும் விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குனி உத்திர பெருவிழா குழுவினர் செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
