என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேவர் பிரான் கோவில் கொடியேற்றம்
    X

    தேவர்பிரான் கோவிலில் கொடிமரத்திற்கு தீபாராதனை காட்டிய போது எடுத்தபடம்.


    தேவர் பிரான் கோவில் கொடியேற்றம்

    • இரட்டை திருப்பதி தேவர்பிரான் கோவிலில் கொடி ஏற்றம் நடந்தது.
    • உற்சவர் தேவர்பிரானுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    நவதிருப்பதி கோவில்களில் 5-வது திருப்பதியான இரட்டை திருப்பதி தேவர்பிரான் கோவிலில் கொடி ஏற்றம் நடந்தது. காலையில் விஸ்வரூபம், யாகசாலை ஹோமம், கொடி பட்டம் உள் பிரகாரம் சுற்றி வந்து கொடி மரம் பூஜை செய்யப்பட்டு 11.45 மணிக்கு கொடி ஏற்றம் நடந்தது. கொடிப் பட்டத்தை அர்ச்சகர் சுந்தர ராஜன் ஏற்றினார். பின்னர் உற்சவர் தேவர்பிரானுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. தினமும் காலை உற்சவர் தேவர்பிரான் தோளிக்கினியானில் உள் பிரகாரம் சுற்றி புறப்பாடும், மாலை இந்திர விமானம், சிம்ம வாகனம், அனுமார் வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், யானை வாகனம், சந்திரபிரபை வாகனம், குதிரை வாகனம், பல்லக்கு வெட்டிவேர் சப்பரம் ஆகியவற்றில் உள் பிரகாரம் சுற்றி வரும் நிகழ்ச்சி நடைபெறும். வருகிற 24-ந்தேதி 5-ம் திருவிழாவை முன்னிட்டு உற்சவர் தேவர்பிரான் மற்றும் தொலைவில்லிமங்கலம் உற்சவர் செந்தாமரைக் கண்ணன் ஆகியோரது கருட சேவை நடைபெறுகிறது.

    இந்நிகழ்ச்சியில் நிர்வாக அதிகாரி அஜித், தக்கார் கோவில் மணிகண்டன், ஆய்வாளர் லோகநாயகி, அர்ச்சகர் ரகு, ஆத்தான் திருமாளிகை ராமானுஜ சுவாமி, ஸ்தலத்தார்கள் ஸ்ரீதரன், சந்தானம், வாசு, முன்னாள் அறங்காவலர் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி, சீனிவாசா அறக்கட்டளை முதுநிலை செயல் அலுவலர் கசங்காத்த பெருமாள், கள இயக்குனர் விஜயகுமார், பொறியாளர் சுப்பிரமணியம் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×