என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுந்தர் ராஜா பெருமாள் கோவிலில் கோபுர கலசத்தை திருட முயன்ற 5 பேர் கைது
    X

    சுந்தர் ராஜா பெருமாள் கோவிலில் கோபுர கலசத்தை திருட முயன்ற 5 பேர் கைது

    • சுந்தர் ராஜா பெருமாள் கோவில் தனியாருக்கு சொந்தமான கோவில்.
    • ஆள் நடமாட்டம் இருந்ததால் கலசத்தை திருட முயன்றவர்களை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி அடுத்த திருமணம் கிராமத்தில் சுந்தர் ராஜா பெருமாள் கோவில் உள்ளது. இந்தக் கோவில் தனியாருக்கு சொந்தமான கோவில். இக்கோவில் கோபுரத்தில் கலசம் இருந்தது. நேற்று இரவு கோவில் கலசத்தை திருட மர்மநபர்கள் திருட முயன்றனர்.

    அப்போது அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் இருந்ததால் கலசத்தை திருட முயன்றவர்களை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    இதுகுறித்து வெள்ளவேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த வெள்ளவேடு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்நாதன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து கலசம் கொள்ளையடிக்க வந்த மர்ம நபர்கள் 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×