search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் துறைமுகத்தில் மீன்கள் விலை உயர்வு
    X

    மீன் வாங்க திரண்ட பொதுமக்களை படத்தில் காணலாம்.

    கடலூர் துறைமுகத்தில் மீன்கள் விலை உயர்வு

    • வெளியூர் வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் போட்டி போட்டு வாங்கி சென்று வருகின்றனர்.
    • வஞ்சிரம் மீன் ரூ. 800 முதல் ரூ. 900 வரை விற்பனை செய்யப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் துறைமுகத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் தினந்தோறும் தங்கள் விசை மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடிக்க சென்று வருகின்றனர். இதனை தொடர்ந்து கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் மீன் விற்பனை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் போட்டி போட்டு வாங்கி சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மீன் வறுத்து குறைவாக இருந்து வந்ததால் மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டன. இன்று ஞாயிற்றுக்கிழமை கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் ஏராளமான மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றதை காண முடிந்தது. இதில் இன்று மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டது.

    வழக்கமாக கிலோ ரூ.500 முதல் ரூ. 600 வரை விற்பனை செய்யப்படும் வஞ்சிரம் மீன் ரூ. 800 முதல் ரூ. 900 வரை விற்பனை செய்யப்பட்டது. இதே போல சங்கரா மீன் ரூ. 350 முதல் ரூ. 400 வரையும், சீலா மீன் ரூ.400-க்கு , நெத்திலி மீன் ரூ.20-க்கும், நண்டு கிலோ ரூ. 300-க்கும், சிறிய வகை இறால் ரூ. 300-க்கும், பெரிய வகை இறால் ரூ. 600-க்கு விற்பனை செய்யப்பட்டது. பன்னி சாத்தான் மீன் ரூ. 500-க்கும், பாறை ரூ. 350-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை ஏற்றத்தினால் கடலூர் துறைமுகத்தில் இன்று காலை பொதுமக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. மேலும் மீன் வாங்க வந்தவர்களும் குறைந்த அளவிலேயே மீன்களை வாங்கி சென்றதையும் காணமுடிந்தது.

    Next Story
    ×