என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியில் மாணவர்களுக்கு சுடுமண் விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    கோத்தகிரியில் மாணவர்களுக்கு சுடுமண் விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • தாய்மடி அருங்காட்சியகத்தை பிரதிபலிக்கும் வகையில் சுடுமண் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • மண்பாண்டங்கள் செய்யவும், கலைப் பொருட்களை வடிவமைக்கவும் கற்று தேர்ந்தனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் அழிந்து வரும் பாரம்பரிய மண்பாண்ட தொழில்கள் மற்றும் கீழடி தமிழரின் தாய்மடி அருங்காட்சியகத்தை பிரதிபலிக்கும் வகையில் சுடுமண் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    அப்போது தமிழரின் பழங்கால சிற்பக்கூடத்தை அனைவரும் கண்டுகளிக்க வேண்டும், சுடுமண் களிமண் தொழிலை கற்றுக் கொள்ள வேண்டும் என்பவை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாணவர்களும் ஆசிரியர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டு மண்பாண்டங்கள் செய்யவும், கலைப் பொருட்களை வடிவமைக்கவும் கற்று தேர்ந்தனர்.

    Next Story
    ×