என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
ஆண்டிபட்டி அருகே பெண் தற்கொலை
- குடும்ப பிரச்சினையில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வருசநாடு:
ஆண்டிபட்டி அருகே கோரையூத்து பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்கண்ணன் மனைவி பானுப்பிரியா(30). இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பானுப்பிரியாவின் தந்தை முருகன் அவரிடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கி இருந்தார்.
இதனால் அவர் தந்தை வீட்டிலேயே தங்கி உள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.1 லட்சத்தை திருப்பி தந்துவிட்டார். அதிலிருந்து தந்தை-மகள் 2 பேரும் சரியாக பேசிகொள்வதில்லை. இந்த நிலையில் பானுப்பிரியா விஷம் குடித்து மயங்கினார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார். இதுகுறித்து மயிலாடும்பாறை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






