என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் மாயம்
    X

    பெண் மாயம்

    • நேற்று முன்தினம் இரவு வீட்டில் எழிலரசி தூங்க சென்றார்.
    • பதறிபோன பெற்றோர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடிபார்த்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் லிங்கநாய்க்கனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் எழிலரசி (வயது22). இவர் பி.ஏ. வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் எழிலரசி தூங்க சென்றார். காலையில் எழுந்து பார்த்தபோது எழிலரசி காணவில்லை. பதறிபோன பெற்றோர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடிபார்த்தனர். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் மாயமானது தெரியவந்தது.

    இதுகுறித்து கோவிந்தராஜ் கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான எழிலரசியை தேடிவருகின்றனர்.

    Next Story
    ×