search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில் இருந்து மாநில அளவிலான பயிற்சிக்கு கோவை சென்ற விவசாயிகள்
    X

    ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில் இருந்து மாநில அளவிலான பயிற்சிக்கு கோவை சென்ற விவசாயிகள்

    • கோவை நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர்மற்றும் தலைவர் கிருஷ்ணன் அங்கக வேளாண்மையின் தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.
    • 3-வது நாளில் உழவியல் துறையின் மூலமாக ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

    செய்துங்கநல்லூர்:

    ஸ்ரீவைகுண்டம் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டம்- அட்மா திட்டத்தின் மூலம் அங்கக வேளாண்மை என்ற தலைப்பில் மாநில அளவிலான பயிற்சிக்காக ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில் இருந்து கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழத்திற்கு விவசாயிகள் அழைத்து செல்லப்பட்டனர்.

    இப்பயிற்சியின் முதல் நாளில் கோவை நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் கிருஷ்ணன், பேராசிரியர்கள் ராமசுப்ரமணியன், சுகந்தி, கவிதா ஆகியோர் அங்கக வேளாண்மையின் தொழில்நுட்பங்களை பகுதி வாரியாக விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

    இப்பயிற்சியின் மையத்தின் வாயிலாக அங்கக வேளாண்மையின் நோக்கம், முக்கியத்துவம், மண் மேலாண்மை, உர மேலாண்மை, பூச்சி, நோய் மேலாண்மை, களை நிர்வாகம், அங்கக பொருட் களை சந்தைபடுத்துதல் ஆகிய தலைப்புகளில் தொழில்நுட்ப கருத்துக்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு கள மேற்பார்வை யிடுதல் மற்றும் செயல் விளக்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

    2-வது நாளில் தோட்டக் கலைப்பயிர்களில் அங்கக வேளாண்மையின் தொழில் நுட்பங்கள், தோட்டக்கலைப் பயிர்களில் ஸ்ரீவைகுண்ட பகுதி விவசாயிகளுக்கு ஏற்றவாறு அதிக லாபம் ஈட்டும் உத்திகள், வாழை அடர் நடவு சாகுபடி பற்றி பேராசிரியர் மற்றும் தலைவர் முத்து வேல் (பழத்துறை) விவசாயி களுக்கு விளக்கமாகவும் வயல்வெளி தோட்ட ஆய்வு களின் மூலமாகவும் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

    3-வது நாளில் உழவியல் துறையின் மூலமாக ஒருங்கி ணைந்த பண்ணையம் பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இதனை உழவியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் பரசு ராமன் தலைமையில் இளநிலை வேளாண்மை அலுவலர் கஸ்தூரி ஒருங்கி ணைந்த பண்ணையத்தின் நோக்கம், முக்கியத்துவம், பல்கலைக்கழத்தில் ஒருங்கி ணைந்த பண்ணையத்திற் கான மாதிரி திடல் ஆகியவை பற்றி விவசாயி களுக்கு விரிவாக விளக்கி னார்.

    இம்மாநில அளவிலான பயிற்சியில் விவசாயிகள் ஆர்வமாக பங்குபெற்று அங்கக வேளாண்மையின் தொழில்நுட்பங்களை அறிந்துக் கொண்டு அதனை தத்தம் வயல்களில் செயல் முறைபடுத்தவும் அடுத்த தலைமுறையினருக்கு நஞ்சில்லா உணவை வழங்க இப்பயிற்சி ஊன்றுகோலாக இருந்தது எனக் கூறினர்.இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா தொழில்நுட்ப வல்லுநர்கள் மேற்கொண்டனர்.

    Next Story
    ×