என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகள் உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் தரமான விதைகளை வாங்க வேண்டும்- துணை இயக்குநர் தகவல்
    X

    விவசாயிகள் உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் தரமான விதைகளை வாங்க வேண்டும்- துணை இயக்குநர் தகவல்

    • விதை கொள்கலனில் விவர அட்டை உள்ளதா? என கவனித்து வாங்க வேண்டும்.
    • சான்று பெறாத விதைகளை விதைப்பதால் மகசூல் பாதிக்க வாய்ப்பு உள்ளது.

    நெல்லை:

    நெல்லை விதை ஆய்வு துணை இயக்குநர் சுஜதாபாய் வெளியிட்டுள்ள செய்தி க்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    உரிமம் பெற்ற விற்பனை நிலையம்

    நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் தங்களது விதை தேவைகளுக்கு விதை விற்பனை உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் விதை சான்று துறையினரால் சான்று செய்ய பெற்ற விதைகளை வாங்க வேண்டும்.

    விதை கொள்கலனில் விவர அட்டை உள்ளதா? என கவனித்து வாங்க வேண்டும். விவர அட்டைகளில் விதையின் காலக்கெடு தேதியை கவனித்து காலக்கெடு முடிவடையாத விதைப்பதற்கு போதிய அவகாசம் உள்ள விதைகளை வாங்க வேண்டும்.

    விதை சான்றுதுறை

    விதை சான்று துறையின் கீழ் அறிவிக்கப்பட்ட ரகங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். அவரவர் பகுதிக்கு ஏற்ற ரகமா, அந்த பருவத்திற்கு ஏற்ற ரகம்தானா என்பதை கவனித்து வாங்க வேண்டும்.

    விதைகள் வாங்கும் போது விற்பனை ரசீதை கண்டிப்பாக கேட்டு வாங்க வேண்டும்.

    விற்பனை ரசீதில் பயிர், ரகம், குவியல் எண் மற்றும் காலக்கெடு ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளதா? என்பதை கவனித்து வாங்க வேண்டும். மேலும் விற்பனை ரசீதில் வாங்குபவர்கள் கண்டிப்பாக கையொப்பம் இட்டு வாங்க வேண்டும். விதையின் கொள்கலன் கிழி படாமல் அட்டைகள் பொருத்தி நன்றாக தைக்கப்பட்டு சீல் இடப்பட்டுள்ளதா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    சான்று பெறாத உண்மை நிலை விதைகள் அல்லது விபர அட்டை இல்லாத விதைகளை வாங்கி விதைப்பு செய்தால் முளைப்பு மற்றும் மகசூல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    எனவே விவசாயிகள் விதைகள் வாங்கும் போது இவற்றை கவனத்தில் கொண்டால் விளைச்சல் பாதிப்புகள் இல்லாமல் அதிக மகசூல் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×