என் மலர்
உள்ளூர் செய்திகள்

குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை வைத்த விவசாயிகள்.. கவனிக்காமல் போனில் மூழ்கிய அதிகாரிகள்
- கூட்டத்தில் முக்கிய அதிகாரிகள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்து வருவதாக குற்றச்சாட்டு
- அதிகாரிகள் சமாதானம் செய்த நிலையில் விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
பொன்னேரி:
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முக்கிய அதிகாரிகள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்து வருவதாக, விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் சமாதானம் செய்த நிலையில் விவசாயிகள், கூட்டத்தில் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யாவிடம் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை எடுத்துரைத்தனர். அப்போது அரசு அதிகாரிகள் அதனை கவனிக்காமல், செல்போனில் மூழ்கியிருந்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






