search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூலூரில் 21-ந் தேதி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
    X

    சூலூரில் 21-ந் தேதி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

    • சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
    • நாராயணசாமி நாயுடுவின் 38-வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

    சூலூர்,

    கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் சூலூரில் நடந்தது. தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார்.

    பொருளாளர் தங்கராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில தலைவர் சண்முகம் பேசியதாவது:-

    டிசம்பர் 21-ல் விவசாயிகளின் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 38-வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நினைவு தினத்தன்று வழக்கமாக சூலூரில் இருந்து வையம்பாளையம் வரை ஊர்வலமாகச் சென்று அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

    ஆனால் மாநில அரசு தற்போது இலவச மின்சாரத்துக்கு ஆதார் விவரங்களை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

    அதோடு மட்டுமல்லாமல் அன்னூர், வாரப்பட்டி, தத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய விளை நிலங்களை கையகப்படுத்தி தொழிற்பேட்டை அமைக்க முயற்சி செய்கிறது. இது முற்றிலும் விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும். இதனை கட்சி சார்பற்ற விவசாய சங்கம் கடுமையாக எதிர்க்கிறது.

    விவசாயிகள் சஙகம் தொழில் வளர்ச்சியை ஆதரிக்கிறது. அதே நேரத்தில் விவசாய நிலங்களை அழிப்பதை எதிர்க்கிறது. பாமாயிலை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதால் வெளிநாட்டு விவசாயிகள் பலன் அடைந்து வரு கின்றனர்.

    அதற்கு பதிலாக உள்நாட்டு விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக தேங்காய் பொருட்களை விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

    தென்னை வாரியத்தை உடனடியாக மாநில அரசு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாராயணசாமி நாயுடு நினைவு தினமான டிசம்பர் 21-ந் தேதி சூலூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த சங்கத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×