என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாப்பாரப்பட்டியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
- பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
- யாணையால் தாக்கப்பட்ட முதியவருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
பாப்பாரப்பட்டி,
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பாப்பாரப்பட்டி கீழ் பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் குமார், மாவட்ட துணை செயலாளர் ஜீவானந்தம் மற்றும் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.
காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் விளைநிலங்களில் புகுந்து ஏற்படுத்திய பயிர் சேதத்தை முறையாக கணக்கிட்டு இழப்பீடு வழங்க வேண்டும். காட்டு யாணையால் தாக்கப்பட்ட முதியவருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
வனப்பகுதியில் சிறு வன மகசூல் குத்தகையியல் முறைகேடு ஈடுபட்டு பட்டா நிலத்தில் சாகுபடி செய்யும் சீதாப்பழ மகசூலுக்கு விவசாயிகளிடம் மாமூல் கேட்கும் முறைகேடுகளில் ஈடுபடும் வனத்துறை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் முழக்கம் எழுப்பினர்.