search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒட்டன்சத்திரத்தில் வரத்து அதிகரித்த நிலையிலும் தக்காளி விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
    X

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்த தக்காளி பெட்டிகள்.

    ஒட்டன்சத்திரத்தில் வரத்து அதிகரித்த நிலையிலும் தக்காளி விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

    • ஒட்டன்சத்திரம் காந்திமார்க்கெட் மற்றும் காமராஜர் மார்க்கெட்டுக்கு சராசரியாக 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பெட்டிகள் தக்காளி வருகிறது.
    • ஒரு பெட்டி தக்காளி ரூ.200 முதல் ரூ.350 வரை விற்பனையா வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் அதனைசுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் தக்காளி அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. அங்கிருந்து ஒட்டன்சத்திரம் காந்திமார்க்கெட்டுக்கு வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    பின்னர் அவை வியாபாரிகளால் வாங்கப்பட்டு தமிழகத்தில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக தக்காளிக்கு நிலையான விலை கிடைக்காமல் இருந்தது. இதனால் போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் அறுவடை செய்யாமலும், குப்பையில் கொட்டியும் வந்தனர்.

    தற்போது தக்காளிக்கு போதிய விலை கிடைத்து வருகிறது. குறிப்பாக வரத்து அதிகரித்துள்ள நிலையில் விலை போதுமான அளவு கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர். ஒட்டன்சத்திரம் காந்திமார்க்கெட் மற்றும் காமராஜர் மார்க்கெட்டுக்கு சராசரியாக 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பெட்டிகள் தக்காளி வருகிறது.

    இவை மதுரை, சிவகாசி உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளாவுக்கும் அனுப்பிைவக்கப்படுகிறது. ஒரு பெட்டி தக்காளி ரூ.200 முதல் ரூ.350 வரை விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவில் திருவிழாக்கள், கும்பாபிஷேகம், திருமண விஷேசங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளால் தக்காளிக்கு நல்ல விலை கிடைப்பதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×