என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட விவசாயிகள்
    X

    கொடும்பாவி இழுத்து நூதன வழிபாட்டில் ஈடுபட்ட விவசாயிகள்.

    மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட விவசாயிகள்

    • போதிய தண்ணீர் வராததால் குறுவை பயிர்கள் கருக தொடங்கின.
    • நகரின் முக்கிய வீதிகள் வழியாக கொடும்பாவியை இழுத்து சென்றனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி பகுதிகளில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்ட இடங்களில் போதிய தண்ணீர் வராததால் பயிர்கள் பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில், தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்களை காப்பாற்ற, வருண பகவானிடம் மழை பெய்ய வேண்டி விவசாயிகள் கொடும்பாவி இழுத்து நூதன வழிபாட்டில் ஈடுபட்டனர்.

    களிமண்ணால் கொடும்பாவி கட்டி வயிற்று நடுவே தீச்சட்டி வைத்து நெடும்பலம், அண்ணாநகர் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக கொடும்பாவியை இழுத்து சென்றனர்.

    பின், முள்ளியாற்றில் கொடும்பாவியை விட்டனர்.

    Next Story
    ×