என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெற்றிலை விலை சரிவால் விவசாயிகள் கவலை
- ஒரு மூட்டை வெற்றிலை குறைந்தபட்சம் ரூ. 6 ஆயிரத்திலிருந்து அதிகபட்சமாக ரூ.27 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.
- இந்த வாரம் ஒரு மூட்டைக்கு பத்தாயிரம் வரை விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடத்தூர்,
தருமபுரி மாவட்ட கடத்தூர் பகுதியில் வெற்றிலை விற்பனை ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் ஒரு மூட்டை வெற்றிலை அதிகபட்சமாக ரூ.38 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.
இந்த வாரம் விலை குறைந்து 128 கட்டுகள் கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை குறைந்தபட்சம் ரூ. 6 ஆயிரத்திலிருந்து அதிகபட்சமாக ரூ.27 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.
கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் ஒரு மூட்டைக்கு பத்தாயிரம் வரை விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Next Story






