search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளிர் சுய  உதவிக் குழுக்களின் கடன் தள்ளுபடியை ஆய்வு செய்ய வெளிமாவட்ட சிறப்பு தணிக்கையாளர்கள்
    X

    மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன் தள்ளுபடியை ஆய்வு செய்ய வெளிமாவட்ட சிறப்பு தணிக்கையாளர்கள்

    • அரசாணை வழங்கி தமிழக அரசு தலைமை தணிக்கை இயக்குநர்
    • அரசாணை வழங்கி தமிழக அரசு தலைமை தணிக்கை இயக்குநர்

    சேலம்:

    கூட்டுறவு நிறுவனங்க ளில் மகளிர் சுய உதவிக்கு ழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டு 31.03.2021 தேதியில் நிலுவையில் உள்ள தொகையில் அபராத வட்டி மற்றும் இதர செலவினங்களை தவிர்த்து, அசல் மற்றும் வட்டி தொகைகளை தள்ளுபடி செய்து, ஆணை வழங்கப்பட்டது. இந்த அரசாணையில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 3.12.2021 வரையிலான வட்டி தள்ளுபடியினை அரசே வழங்கும் என ஆணையிட்டது.

    இந்த அரசாணையின்படி கூட்டுறவு துறையின் சரிபார்ப்புக் குழுவால் சரிபார்க்கப்பட்ட சுய உதவிக்குழு கடன்களுக்கான பயனாளிகள் பட்டியல் வெளி மாவட்ட தணிக்கையாளர்கள் மூலம் சிறப்பு தணிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

    தணிக்கை நடைமுைறகள் வெளியீடு

    இந்த சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட ஏதுவாக வெளி மாவட்ட தணிக்கையாளர்கள் ஒதுக்கீடு மற்றும் சிறப்பு தணிக்கை குறித்தான நடைமுறைகள் குறித்து அரசாணை வழங்கி தமிழக அரசு தலைமை தணிக்கை இயக்குநர் ெஜயசங்கர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி பட்டியலை சிறப்பு தணிக்கை குழு தலைவர் கட்டுப்பாட்டில் தணிக்கையாளர் பணி மேற்கொள்ள வேண்டும். தணிக்கையாளர்களுக்கு இச்சிறப்பு தணிக்கையின் முக்கியத்துவம் கருதி எவ்வித விடுப்பும் அனுமதிக்கப்பட மாட்டாது.சிறப்பு பணியில் 10 நாட்களுக்குள் தணிக்கை யாளர்கள் நிறைவு செய்வதற்கு போதிய தணிக்கையாளர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை மண்டல இணை இயக்கு நர்கள் கண்காணிப்பு செய்யவும், தணிக்கைக்கு தேவைப்படும் நாட்கள் அடிப்படையில், கூடுதல் நாட்கள் தேவைப்படும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு தணிக்கையாளர்களை மறு ஒதுக்கீடு செய்ய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். சுய உதவிக்குழு கடன்களுக்கான தள்ளுபடி பெறுவதற்கு உண்டான தகுதிகளை நிறைவு செய்தோருக்கு மட்டுமே தள்ளுபடி வழங்கப்ப டுவதை உறுதி செய்யும் வகையிலும், தள்ளுபடிக்கு முழு தகுதியுள்ள பயனாளிகள் விடுபட்டு விடக்கூடாது எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

    சிறப்பு தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கும்போது நிர்வாக அலுவலர், மேலாளர் சான்றிதழ் மற்றும் சிறப்பு தணிக்ைக மேற்கொள்ளும் தணிக்கையாளரின் சான்றிதழ் ஆகியவை இணைக்கப்பட வேண்டும். சரக உதவி இயக்குநர்கள், கட்டுபாட்டு அலுவலர்கள் சிறப்பு பணி மேற்கொள்ள ஏதுவாக ஒதுக்கீடு செய்யப்படும் அனைத்து தணிக்கையாளர்களையும், வருகிற 17-ந்தேதி பிற்ப கலில் சம்பந்தப்பட்ட பணியிடங்களில் இருந்து விடுவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    சேலம், நாமக்கல்

    ேசலம், நாமக்கல் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தணிக்கை யாளர் எண்ணிக்கை விபரம் வருமாறு:-உதவி இயக்குநர் சரகங்களான திருவண்ணா மலையில் இருந்து 22 பேர், கோவையில் இருந்து 16 பேர், கிருஷ்ணகிரியில் இருந்து 7 பேர் சேலம் உதவி இயக்குநர் சரகத்திற்கு தணிக்கையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதுபோல் திருச்சியில் இருந்து 5 பேர், தஞ்சாவூரில் இருந்து 5 பேர், சேலம் மண்டலத்தில் இருந்து 2 பேர், கோவையில் இருந்து 18 பேர் நாமக்கல் உதவி இயக்குநர் சரகத்திற்கு தணிக்கையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×