என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை வண்ணார்பேட்டையில் முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்
    X

    கூட்டத்தில் மூத்த குடிமக்கள் கவுரவிக்கப்பட்ட காட்சி. அருகில் விவேகானந்தா பள்ளி தாளாளர் திருமாறன் மற்றும் பலர் உள்ளனர். 

    நெல்லை வண்ணார்பேட்டையில் முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்

    • சிறப்பு விருந்தினராக முன்னாள் பொறுப்பு அலுவலர் கேப்டன் ஜாய்சன் கலந்து கொண்டார்.
    • நிகழ்ச்சியில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப் பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்க 22-வது ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நெல்லை வண்ணார் பேட்டை விவேகானந்தா பள்ளியில் நடைபெற்றது.

    இதில் சங்க தலைவர் செல்லபாண்டியன் தலைமை தாங்கினார்.செயலாளர் செல்லத்துரை, பள்ளி தாளாளர் திருமாறன், ஷிபா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் முகமது ஷபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் பொறுப்பு அலுவலர் கேப்டன் ஜாய்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.வக்கீல் செல்லதுரை வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் மாணவர்கள் சாதனையாளர்கள், மூத்த குடிமக்கள் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

    முதன்மை ஒருங்கி ணைப்பாளர் தேவதுணை நன்றி கூறினார். இதில் ஒருங்கிணைப்பாளர்கள் வெள்ளத்துரை, அந்தோணி சுப்பிரமணியம், பிரின்ஸ் சங்கரபாண்டியன் விஸ்வ நாதன் சுப்பையா, லட்சு மணன் அண்ணாமலை, நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×